2005ம் வருடம், மார்ச் 25ம் தேதி, RK, அப்பா மற்றும் அம்மா மூவரும் ரோசஸ்டரிலிருந்து Nayagara Falls க்கு சென்றோம். அன்று இரவு night view அருமையாக இருந்ததால், அதை அம்மா மிக நன்றாக ரசித்தார். Nayagara Falls என்றால் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அப்பாவுடன் சேர்ந்து பார்ப்பது, இன்னும் சந்தோஷம். பின்பு அடுத்த நாள், Behind the Falls பார்த்துவிட்டு அங்கிருந்து Sky Towerக்கு சென்றோம். அங்கும் அம்மா நன்றாக enjoy பண்ணினார். பொதுவாக அம்மாவுக்கு சுற்றுலா செல்வது என்றால் மிகவும் இஷ்டம். நன்றாக ரசித்து வேடிக்கை பார்ப்பார்.அதற்கு பிறகு Casino விளையாடுவதற்கு சென்றோம். அம்மாவுக்கு எப்போதும் நல்ல Luck உண்டு. போன முறை சென்ற போதும், அம்மா நிறைய டாலர் win பண்ணினார். Casino முடித்து விட்டு இந்திய உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு பின்பு ரோசஸ்டருக்கு வீடு திரும்பினோம். அம்மாவுடன் இந்த கடைசி சுற்றுலா செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் ஒரு திருப்தி. என்றென்றும் அந்த நினைவுகள் மனதில் அழியாமல் நிற்கும்.
No comments:
Post a Comment